முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவு பலூன் சர்ச்சை: சீன பயணத்தை ரத்து செய்தார் அமெரிக்க வெளியுறவுச்செயலர்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      உலகம்
Anthony-Blinken 2023 02 04

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.  

சீன உளவு பலூன் பறக்க விடப்பட்டது அமெரிக்க இறையாண்மைக்கு எதிரான திட்டமிட்ட தெளிவான அத்துமீறல் என்று அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உளவு பலூன் 3 பெரிய பேருந்துகளை ஒன்றாக சேர்த்தது போன்ற அளவுக்குப் பெரியது என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இது குறித்து அதிகாரிகள், அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம். நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை. பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மோண்டானாவில் காணப்பட்ட உளவு பலூன் போல் லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு உளவு பலூனை பார்த்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவோ அது உளவு பலூன் அல்ல வானிலை ஆய்வுக்காக அறிவியல் காரணங்களுக்காக தாங்கள் அனுப்பிய விண் ஓடம் தவறுதலாக திசை மாறி அமெரிக்க வான்வழிக்குள் வந்து விட்டது என்று தெரிவித்தது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்பதாக இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து