முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் திடீர் நிலச்சரிவு: பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
Himachal 2023 02 05

Source: provided

சம்பா : இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பாலம் இடிந்து விழுந்ததால் சம்பா-பர்மூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

சம்பா மாவட்டத்தின் புறநகரில் உள்ள பார்மூர் கிராமத்தின் லூனா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலச்சரிவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது குறித்து துணை ஆணையர் டி.சி. ராணா கூறும் போது, இந்த பாலம் தேசிய நெடுஞ்சாலை 154-ஏ-ல் உள்ள 20 மீட்டர் நீளமுள்ள பாலமாகும். இது பார்மூர் பழங்குடியினர் பகுதியை சம்பாவுடன் இணைக்கிறது. பாலம் இடிந்ததால் முழுப் பகுதிக்கும் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் சோலி பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து