எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தைப்பூச திருவிழா நேற்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த வாரம் முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர்கள் முன் செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரை அரோகரோ முழக்கத்துடன் நான்கு ரத வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. சுப்பிரமணிசாமியின் வேலுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மேள தாளம் முழங்க கடலுக்கு கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் வேலுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தைப்பூசத்தன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதி அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அந்த பகுதி மக்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் பார்வதி திருமணம் இமயமலையில் நடந்த போது அந்த திருமணத்திற்கு காண்பதற்கு முனிவர்கள், தேவர்கள் குவிந்தனர். இதனால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது
இதனை அடுத்து சமநிலையை அடைய அகத்தியர் தென்பகுதிக்கு வந்தார். அந்த இடம்தான் தோரணமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருதமலை, வயலூர், எட்டுக்குடி முருகன் ஆலயங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூசம் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் சுமந்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
இன்றைய நாள் எப்படி?
12 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி , அம்பாள் தங்க விருசப சேவை.
- ஶ்ரீசைலம், வேதாரண்யம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் பவனி.
- திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டயருளல்.


