முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: நிவாரணங்களை வழங்கிய இந்தியாவிற்கு துருக்கி நன்றி

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      உலகம்
India-Turkey 2023 02 07

Source: provided

அங்காரா : நிலநடுக்கத்தால் கடும் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது.

துருக்கியில் கடந்த 36 மணி நேரமாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

துருக்கி நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், துருக்கி நாட்டிற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவின் தற்போது வெளியுறவு கொள்கைக்கும், துருக்கிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது. காஷ்மீர் விவகாரத்திலும், சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை துருக்கி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் அதை எல்லாம் மீறி தற்போது துருக்கிக்கு இக்கட்டான நேரத்தில் உதவ இந்தியா முன் வந்துள்ளது.

இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதோடு 100 மீட்பு படை வீரர்கள் துருக்கி சென்றுள்ளனர். இது போன்ற மீட்பு பணிகளில் உடல்களை, மனிதர்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற நாய்களும் இந்த மீட்பு பணிக்கு களமிறங்கி உள்ளது. பல்வேறு மீட்பு உபகரணங்களும் இதில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு, தேவையான உதவிகளை செய்ததற்காக, இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரிமுரளிதரன், புதுடில்லியில் உள்ள துருக்கி துாதரகத்துக்கு சென்று, பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்து தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, துருக்கியின் துாதர் பிராட் சனல் சார்பில், இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து