முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்களூருவில் இருந்து அயோத்தி செல்கிறது ராமர் சிலை அமைக்க பிரம்மாண்ட கல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
Ramar-statue 2023 03 19

Source: provided

மங்களூரு : அயோத்தியில் ராமர் சிலை அமைப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து பிரம்மாண்ட கல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நேபாள நாட்டில் இருந்தும் கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ராமர் சிலை அமைப்பதற்காக கர்நாடக மாநிலம், மங்களூரு கர்காலா அருகே உள்ள துங்கபத்ரா நதிக்கரையில்  மிகப்பெரிய கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்த பிரம்மாண்ட கல்லுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் சிறப்பு பூஜை செய்து, லாரியில் அனுப்பி வைத்தனர். இதனை மின்சார துறை அமைச்சர் சுனில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து