முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமியின் மனு ஏற்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
EPS 2023 03 18

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 18 மற்றும்19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. இரு நாட்களில் மொத்தம் 225 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தற்போது அவரது வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. இன்று வரை வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் உள்ளது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இந்த தேர்தலை நடத்த தடை செய்யக்கோரி அவசர வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தபோது, வரும் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், அதுவரையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தது.

எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே வரும் 24ம் தேதி நீதிமன்ற உத்தரவினை அடுத்து தேர்தல் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து