Idhayam Matrimony

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

திங்கட்கிழமை, 12 மே 2025      தமிழகம்
Rain 2024-12-04

Source: provided

சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று (மே 13-ல்) நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மற்றும் வேலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 14, 15 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை லேசான சாரல் மழை பெய்தது. திங்கள்கிழமை (மே 12) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், ஏனைய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு, பரமத்திவேலூரில் தலா 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 104, மதுரை நகரம் - 103.64, திருச்சி, பாளையங்கோட்டை - (தலா) 103.1, வேலூா் - 102.38, திருத்தணி - 101.66, சென்னை மீனம்பாக்கம் - 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து