Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட கொடி யாத்திரை நடத்த பா.ஜ.க. முடிவு

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
BJP-Office

புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா நடத்துகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் ஏப்ரல் 22-ல் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் ராணுவத்தின் துணிச்சலை எடுத்துச் சொல்லவும், அவர்களின் சாதனைகளை பட்டியலிடவும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் யாத்திரையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் எதிர்கொள்ள பாஜக தயாராகிறது. தேசியக் கொடிகளுடன் பாஜகவினர் நடத்தும் இந்த யாத்திரை மூலம், பொதுமக்களுடன் கட்சியினர் நேரடியாகத் தொடர்புகொள்கின்றனர். ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்க கருத்தரங்குகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலுமான பாஜகவினரின் இந்த கொடி யாத்திரை, மே 13 முதல் 23 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளன. யாத்திரையின் பிரச்சாரத்தின் போது பல்வேறு மட்டங்களிலான பாஜகவினர் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொள்ள இருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பிறகு, திங்கள்கிழமை பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தகத்துறையின் பியூஷ் கோயல், மனோகர் லால் கட்டார், கிரண் ரிஜிஜு, பூபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொடி யாத்திரைக்கான உத்தி வகுக்கப்பட்டு, யாத்திரை நேற்று நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து