முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: இ.பி.எஸ்.

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இது  குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மரணமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 6 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 5 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 6 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து