முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஆனார் எம்பாப்பே

புதன்கிழமை, 22 மார்ச் 2023      விளையாட்டு
Mbappe 2023 03 22

Source: provided

பாரிஸ் : கிலியன் எம்பாப்பே பிராச்ன்ஸ் நாட்டு கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எம்பாப்பேவை பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஹியூகோ லோரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அந்தப் பதவிக்கு 24 வயதான எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கவனம் பெற்றவர்...

2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதிலிருந்து எம்பாப்பே ஏராளமான ரசிகர்களை வென்று நட்சத்திர வீரராக இருக்கிறார். அதுவும் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் எம்பாப்பே அதிக கவனம் பெற்ற வீரராக இருக்கிறார். காரணம் அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் எம்பாப்பே காட்டிய அசாத்திய திறமை. போட்டியில் என்னவோமெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தான் பட்டம் வென்றது. அது அவர்களுக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பட்டம். ஆனாலும் மெஸ்ஸியை மிரளவைத்தார் எம்பாப்பே.

3 -3 கோல் கணக்கில்....

பிரான்ஸ் - அர்ஜென்டினா இடையேயான இறுதிப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாம் பாதியில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் எம்பாப்பே கடைசி நிமிடங்களில் சிறப்பாக விளையாடி 3 -3 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்தார்.எனினும் பெனால்டி ஷுட் அவுட்டில் அர்ஜென்டினா வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களின் பாராட்டுகள் எந்த அளவுக்கு குவிந்ததோ, அதே அளவிலான பாராட்டு எம்பாப்பேவுக்கும் கிடைத்தது. இதனால் கத்தார் உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றிருந்தாலும் கூட கவனம் பெற்றவர் என்னவோ இந்த எம்பாப்பே தான்.

புதிய கேப்டனாக...

இந்நிலையில் இப்போது எம்பாப்பேவை பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளார் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். இதனை பிரான்ஸ் ஃபுட்பால் ஃபெடரேஷனும் உறுதி செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து