முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்: புடினிடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வீடியோ வைரல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      உலகம்
Xi-Jinping 2023 03 17

Source: provided

மாஸ்கோ : 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், புடினிடம் கூறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருந்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இரு நாட்டு வணிக உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் சந்திப்பு குறித்து புடின் கூறும் போது, 

சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது என்று பேசினார்.

இந்த நிலையில் ரஷ்ய பயணத்தின் முடிவில் சீன அதிபர் ஜி ஜின்பிங், புடினுடன் கூறிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில்,  அதிபர் மாளிகை வாயிலில் நின்று கொண்டிருக்கும் ஜி ஜின்பிங் புடினின் கைகளைப் பிடித்து , 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும். இந்த மாற்றத்தை நாம் இணைந்து செய்ய இருக்கிறோம் என்று கூறுகிறார்.

அதற்கு புடின், நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன். உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று பதிலளிக்கிறார். 

இதற்கிடையே ஜி ஜின்பிங் இதன் மூலம் அமெரிக்காவுக்கும், பிற உலக நாடுகளுக்கும் மறைமுகமான செய்தியை வழங்கி இருக்கிறார் என்று பல அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து