முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      உலகம்
Saudi-Arabia 2023 03 28

Source: provided

ரியாத் : சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகினர். 

சவுதி அரேபியாவின் தென்மேற்கே ஆசிர் மாகாணத்தில் புனித யாத்திரை சென்றவர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அவர்கள் மெக்கா நகரை நோக்கி பயணித்து உள்ளனர்.  அந்த மாகாணத்தின் ஆபா நகரை இணைக்கும் சாலையில் செல்லும் போது, திடீரென பஸ்சின் பிரேக் பிடிக்காமல் போயுள்ளது.

 இதனால், பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. இதில், பஸ் பாலம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது. சுற்றிலும் வான்வரை கரும்புகை பரவி இருளாக காட்சி அளித்தது. 

இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள், வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி புனித யாத்திரைக்கு சென்ற 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 29 பேர் வரை காயமடைந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து