முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      தமிழகம்
Vande-Bharat-train 2023 03

சென்னை - கோவை இடையே வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 12-வது வந்தே பாரத் ரயில் சென்னை - கோயம்புத்தூர் இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்.8-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று (மார்ச் 30) தொடங்கியது. சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, கோயம்புத்தூரை முற்பகல் 11.40 மணிக்கு அடையும். அங்கிருந்து, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இருமார்க்கமாகவும் இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த சோதனை ஓட்டத்தில், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து