எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இது பற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் என்பவர் சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, நேற்று முன்தினம் மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால், அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார்.
அந்த பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பலர் பாதிப்படைத்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது என்று கூறியுள்ளார். இது தவிர, செயின்ட் பிரான்சிஸ் கவுன்டியில் வைன்னே நகரில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் மிஸிசிப்பி நகரில் வலிமையான சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்த ஒரு வாரத்தில் மற்றொரு சூறாவளி தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |