முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்து தல விமர்சனம்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
ten-point-review 2023 04 01

Source: provided

பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு. பாசம் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு. கவுதம்கார்த்திக், சந்தோஷ்பிரதாப் ஆகியோருடனான சிம்புவின் காட்சிகளும் வசனங்களும் பல அர்த்தங்கள் பொதிந்தவை. அக்கரயில பாடலில் அவரது டான்ஸ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து. கவுதம்கார்த்திக்கின் துடிப்பான நடிப்பும் அவருடைய ரகசியம் நிறைந்த கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. பிரியாபவானிசங்கர் பாத்திரம் சிறியதென்றாலும் நிறைவாக அமைந்திருக்கிறது. கவுதம்மேனன், சந்தோஷ்பிரதாப், அனுசித்தாரா, மதுகுருசாமி, ஜோ.மல்லூரி ஆகியோர் தேவையான அளவு நடித்திருக்கிறார்கள். சாயிஷாவின் நடனம் இளமைத்துள்ளல். பரூக்கின் ஒளிப்பதிவும் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் படத்துக்கு அசுர பலம் சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் பத்து தல செம்ம கெத்து தல.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து