முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்முவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 8-ல் கும்பாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2023      ஆன்மிகம்
Jammu-Tirupati 2023-05-23

Source: provided

ஜம்மு : ஜம்முவில் கட்டப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக, திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக மற்ற ஊர்களிலும் ஏழுமலையானுக்கு கோவில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. 

அந்த வகையில் ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் 6-வது கோவிலாக ஜம்முவில் புதிய கோவில் உருவாகி வருகிறது. 

ஏற்கனவே ஐதராபாத், சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, புவனேசுவரம் ஆகிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மும்பை, ராய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

ஜம்முவில் மாதா வைஷ்ணவி தேவியை தரிசிக்க வரும் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமையும். இந்த கோவில் கட்டுவதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. திருமலையில் நடப்பது போலவே அனைத்து சடங்குகள், பூஜைகள், விழாக்கள் உள்ளிட்டவைகள் இந்த புதிய கோவிலிலும் நடத்தப்படும். 

கோவிலுடன் சேர்த்து உப தெய்வங்களின் சன்னதிகள், மடப்பள்ளி, அன்னபிரசாத கவுண்ட்டர்களும் கட்டப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி அங்கு பல்வேறு ஆன்மீக சடங்குகள் ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்கும். ஜூன் 8-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து