முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் ஆதாயத்திற்காக செங்கோல் நிகழ்வை போலி என்கிறார்கள் : திருவாவடுதுறை ஆதீனம் அறிக்கை

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      ஆன்மிகம்
Atheenam 2023-05-26

Source: provided

சென்னை : செங்கோல் நிகழ்வை அரசியல் ஆதாயத்திற்காக போலி என்கிறார்கள் என்று திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்ளதாகச் சில அறிக்கைாளைக் கண்டோம். 1947-ல், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப் பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாக தெரியவருகிறது. 

ஆட்சி மாற்றத்தின் போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினை செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட தம்முடைய ஆதீனகர்த்தர்,  தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்டபேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாக்கி, தொடர்ந்து செங்கோலை நேருவிடம் கொடுக்கச் செய்தார்கள் . 

நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோய் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார்.   அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக. இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கை தன்மையின் மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தை குறைக்க முயல்தல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை.  இது தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 5 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து