முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடுகள்: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
Stanley-Hospital 2023-05-27

சென்னை, தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கே.ஏ.பி. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகைப் பதிவில் உள்ள குறைபாடுகள் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 

இதில் தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலா 500 எம்.பி.பி.எஸ். இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கே.ஏ.பி. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

பயோமெட்ரிக் வருகைப் பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து