முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்ததாக 20 பேர் கைது

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
Elephants 2023-05-17

Source: provided

தேனி : 144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர்

ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது. இந்நிலையில், அரிக்கொம்பன் யானை கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை நாசம் செய்ததாக பொது மக்கள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தமிழக, கேரள போலீசார் தொழிலாளர்கள் அங்கு செல்ல தடை விதித்தனர். அதன் பின்னர் பெறும் முயற்சிக்கு பின்பு வனத்துறையினர், அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் யானை பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனி கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுளார். குமுளி லோயர் கேம்ப் பகுதியிலிருந்து காலையில் கம்பம் நகரில் அரிக்கொம்பன் நுழைந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் அரிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் யூடியூபர்கள் டிரோனை பறக்க விட்டு யானையை படம் பிடிப்பதால் மிரண்ட யானை புளியந்தோப்பில் இருந்து வெளியேறி வாழை தோப்பிற்குள் புகுந்தது. யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து