முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு ஆலை வெடிவிபத்து: மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி

சனிக்கிழமை, 27 மே 2023      இந்தியா
Mamtha 2023 04 22

Source: provided

கொல்கத்தா : சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கோரினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் ஏக்ரா பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி ஏக்ரா பகுதி மக்களை நேற்று சந்தித்தார். அப்போது சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்துக்காக மம்தா பானர்ஜி மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், சட்டவிரோத பட்டாசு ஆலை வெடிவிபத்துக்காக நான் தலை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உளவுத்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இந்த வெடிப்பைத் தடுத்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும், வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீட்டு காசோலைகளை வழங்கினார். 

குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் உறவினர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கினார். குண்டுவெடிப்பில் பலியானோரின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவருக்கு வீட்டுக் காவலர் பணிகளுக்கான நியமனக் கடிதங்களையும் அவர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து