எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அபுஜா : நைஜீரியா நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு நேற்று பதவியேற்று கொண்டார்.
நைஜீரியா நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்பட்ட சூழலில், அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளால் தேர்தலுக்கு சட்டப்பூர்வ சவால் எழுந்த நிலையில், அந்நாட்டின் புதிய அதிபராக போலா தினுபு நேற்று பதவியேற்று கொண்டார்.
இதனால், அவர் நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார். இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா போன்றோரும் கலந்து கொண்டனர். அழைப்பிதழ்கள் இல்லாத நாட்டு மக்கள் நிகழ்ச்சியை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் 3 நாள் சுற்றப்பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியாவுக்கு சென்று உள்ளார். நைஜீரியா நாட்டுக்கான இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரின் முதல் பயணமும் இதுவாகும்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |