முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் அமைதி நிலவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      இந்தியா
Karke 2023-05-30

புதுடெல்லி, மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மோதல் நிகழ்ந்து வருவதால் அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேற்று (மே 30) சந்தித்து இது தொடர்பாக 4 பக்க மனுவை அளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், பக்தசரண் தாஸ், ஒக்ராம் இபோபி சிங், மேகசந்திர சிங், கைகங்காம், தோக்கோம் லோகேஷ்வர் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், "மணிப்பூரில் கடந்த 3-ம் தேதியில் இருந்து மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் பழங்குடி சமூகத்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 2 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மாத காலமாக மணிப்பூரில் நிலைமை பதற்றமாகவே இருக்கிறது. இருந்தும் மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனத்தை செலுத்தவில்லை. மே 10-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால், பாஜக தலைவர்களின் கவனம் அதில்தான் இருந்தது. அதன்பிறகாவது உடனடியாக செயல்பட்டிருக்கலாம். ஆனால், மே 29-ம் தேதிதான் உள்துறை அமைச்சர் மணிப்பூர் வந்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாகாலாந்தில் துரதிருஷ்டவசமாக இரண்டு மிகப் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எட்டப்பட்ட தீர்வு என்பது நாகாலாந்துக்கு மட்டுமே என்பதாக இருந்தது. ஆனால், அண்டை மாநிலமான மணிப்பூர் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு அப்போது முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது, மணிப்பூர் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், மணிப்பூரிலும் கலவரம் ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து