முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் : டோனி குறித்து ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      விளையாட்டு
Hardik-Pandya 2023-05-30

Source: provided

அகமதாபாத் : இது டோனிக்காக எழுதப்பட்ட விதி; நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

சென்னை வெற்றி...

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

சாய் சுதர்சனுக்கு பாராட்டு....

போட்டிக்கு பிறகு குஜராத் டைட்டான்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்போது, “ எங்களுக்கு என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதாவது நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம் .. இல்லை என்றால் ஒன்றாக தோல்வி அடைவோம். நான் எந்த சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. சிஎஸ்கே சிறப்பாக விளையாடினார்கள். நாங்களும் சிறப்பாக விளையாடினோம். குறிப்பாக சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினார். 

நல்லதே நடக்கும்....

இந்த நிலையில் சிறப்பாக விளையாடுவது எளிதல்ல. நாங்கள் வீரர்களை ஆதரித்து, அவர்களிடமிருந்து சிறந்ததைப் பெற முயற்சித்தோ. இதில் கிடைக்கும் வெற்றி அவர்களின் வெற்றிதான். ராஷித் கான், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் அணியாக சிறப்பாக விளையாடினோம். இதயபூர்வமாக விளையாடினோம். இதனை நினைத்து நாங்கள் பெறுமை கொள்கிறோம். டோனியின் அணி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முடிவு டோனிக்காக எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை நான் தோற்க வேண்டும் என்றால், அது டோனியிடம் என்றால் அதற்கு நான் கவலைப்பட போவதில்லை. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும். " என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து