முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி பேரணி மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      இந்தியா
mamtha 2023-06-01

Source: provided

கொல்கத்தா: டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் பேரணி நடத்தினார். இதன்படி, ஹஜ்ரா பகுதியில் இருந்து ரபீந்திர சதன் பகுதி வரை இந்த ஆதரவு பேரணி நடைபெற்றது. 

அப்போது மம்தா பேசும்போது, எங்களுடைய குழு ஒன்று கொல்கத்தாவில் இருந்து சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து, ஆதரவை வழங்கும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். அதனாலேயே நேற்று பேரணி நடத்தப்பட்டு உள்ளது என கூறினார். இந்த பேரணியானது இன்றும் தொடரும். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நமது நாட்டின் பெருமைக்கு உரியவர்கள். உங்களது போராட்டத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என அப்போது அவர் கூறினார்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் கூறும்போது, டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காந்தி சிலையை நோக்கி நாங்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக செல்வோம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து