முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      உலகம்
Uganda 2023-06-04

Source: provided

மஹாதிசு : சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா ராணுவ வீரர்கள் பலியாயினர்.
சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும் போது,
சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றார்.  இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து