முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      விளையாட்டு
Rudraaj 2023 06 04

Source: provided

புதுடெல்லி : மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார். .பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது. 7-ந்தேதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார். பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது. உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஸ பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பதை குறிப்பிடத்தக்கது.
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரசிகர்கள் , கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ருத்துராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைதள பக்கமும் ருத்துராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காராக உள்ள ருத்துராஜ் அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து