எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மரகத நாணயம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள படம் வீரன். கதை,
வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் ஆதி தனது சிறு வயதில் மின்னல் தாக்கி சுய நினைவை இழக்கிறார். இதனால் பலத்த பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவ மேல் சிகிச்சைக்காக தனது அக்காவுடன் சிங்கப்பூருக்கு செல்கிறார். 14 வருடங்கள் கழித்து சிங்கப்பூரில் இருந்து மீண்டும் வீரனூருக்கு வரும் ஆதி, தனது சிறு வயது நண்பர்களை சந்திக்கிறார். இந்நிலையில்,
வில்லன் வினையின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபத்தான நிலத்தடி குழாய் திட்டத்தால் ஏராளமான உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரிய வருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார் என்பதே படத்தின் மீதி கதை.. பொதுவாக ஹாலிவுட் சினிமாவில் தான் சூப்பர் ஹீரோ படங்கள் வரும். ஆனால் தமிழில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. சூப்பர் ஹீரோவாக நம்பும்படி நடித்திருக்கிறார் ஆதி. நாயகியாக ஆதிரா ராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக வினய் மிரட்டுகிறார். சிறந்த இசைக்கும் அழகான ஒளிப்பதிவும் படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளன. மொத்தத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை தாராளமாக வீரன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |