முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி 2வது வெற்றி

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      விளையாட்டு
Hockey 2023-06-05

Source: provided

ககாமிகஹரா : ஜப்பானில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ககாமிகஹரா நகரில்... 

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியாவுடன், தென்கொரியா, மலேசியா, உஸ்பெகிஸ்தான், சீனத்தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, கஜகஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

உஸ்பெகிஸ்தானை...

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 22-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் மிக கடுமையாக போரடின.

கொரியாவை இன்று...

இந்தியா தரப்பில் மும்தாஜ் கான் (10வது நிமிடம்), தீபிகா (26வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் பிரிவு ஏ-வில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி தங்களது அடுத்த ஆட்டத்தில் இன்று கொரிய அணியை சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து