முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வின் குறித்து ரோகித்: இந்திய ரசிகர்கள் உற்சாகம்

புதன்கிழமை, 7 ஜூன் 2023      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டி அவர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இதுகுறித்து பேசிய ரோஹித் ஷர்மாவிடம் தொகுப்பாளர், ‘அஸ்வினை ஆட்டத்தில் எடுக்காதது கடினமானதாக இருக்குமா?’ என கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ரோஹித், “அஸ்வின் விளையாடப் போவதில்லை என நான் எங்கும் சொல்லவில்லை. நாளை (இன்று) வரை காத்திருப்போம்.

ஏனென்றால் நான் இங்கிருக்கும் பிட்ச்-ஐ கவனித்தேன். அதன் தன்மை நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிருக்கிறது. இன்றைக்கு (நேற்று) இப்படியிருக்கும் இந்த பிட்ச் நாளை (இன்று) கொஞ்சம் மாறலாம். யாருக்கு தெரியும். ஆக, வீரர்களுக்கு ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். 15 பேரும் எந்த நேரத்திலும் விளையாடத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

________________

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் அல்காரஸ் 

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது. 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

________________

இங்கி.,டெஸ்ட் அணியில் மீண்டும் மொயீன் அலி..!

ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது. இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

________________

தயார் நிலையில் 2 ஆடுகளங்கள்

இரண்டாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கிய நிலையில்  எண்ணெய் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், கிரிக்கெட் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது ஆடுகளம் மற்றும் மைதானத்தை சேதப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

எனினும், போராட்டக்காரர்கள், ரசிகர்களோடு ரசிகர்களாக வந்து ஆடுகளத்தில் புகுந்து சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக ஐசிசி 2 ஆடுகளங்களை தயார்நிலையில் வைத்துள்ளது. ஒருவேளை ஆடுகளம் சேதமடையும்பட்சத்தில், இருவரும் விளையாட ஒப்புக்கொண்டால், மாற்று ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவார்கள். இல்லையெனில் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது கைவிடப்படலாம். ஆனால் அப்படி ஏதும் இதுவரை நடக்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து