முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      விளையாட்டு
Gavaskar 2023 06 09

Source: provided

லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

 அடுத்தடுத்து அவுட்...

லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-ம் நாள் முடிவில் 296 எடுத்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரோகித், கில், புஜாரா, கோலி, ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இதில் ஜடேஜா 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆச்சரியம் இல்லை...

இந்தச் சூழலில் ரோகித் அவுட்டானது குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அண்மையில் முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த முறையில் பேட் செய்யவில்லை. அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் விரைந்து அவுட்டான விதத்தில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இளம் வீரர் கில் மற்றும் புஜாரா அவுட்டான விதம் ஏமாற்றம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களது லைன் மற்றும் லெந்த்தை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து