முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      இந்தியா
Modi-Joe-Biden 2023-09-21

புது டெல்லி, 2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

2024-ம் ஆண்டில் நாட்டின் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். 

கடந்த முறை சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி கடந்த குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

இந்நிலையில், வரும் 2024-ம் ஆண்டின் 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து