முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதுமுதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை:நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நீட் முதுநிலை தேர்வு கட்-ஆப்-ஐ பூஜ்யமாக குறைப்பதன் மூலம், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். 

இது பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது. தகுதி தேவையில்லை.   நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறி விட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் நீட் தேர்வில் இல்லை.  

விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும் என்று அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து