முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சிலை கரைப்பு: சென்னை மெரினா கடற்கரையில் 70 டன் கழிவுகள் அகற்றம்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
Marina 2023-09-25

Source: provided

சென்னை : சென்னை  மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி முதல் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகம், பொது இடங்கள் என பல்லாயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.

இதில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,519 சிலைகள், தாம்பரத்தில் 425 சிலைகள், ஆவடியில் 204 சிலைகள் என மொத்தம் 2,148 சிலைகள் காவல் துறையின் அனுமதியுடன் பொது இடங்களில் கடந்த ஒரு வாரமாக வைக்கப்பட்டிருந்தன. 

கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் ஆகிய 4 கடற்கரைகளில் விசா்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.  அதன்படி, 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் 1,948 விநாயகா் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை, பூ, வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் உள்பட இதர கழிவுகள் கடற்கரைகளில் போடப்பட்டது.  இந்த கழிவுகள் கடலுக்குள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்குள் இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 70 டன் கழிவுகளை மெரினா கடற்கரையில் இருந்து மட்டும் அகற்றியுள்ளனர். இதனால், பெருமளவு கடல் மாசு தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலில் கரையாமல் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை கரைக்கும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இந்த பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து