முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவின் பால் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
Mano-Thangaraj 2023 04 01

Source: provided

சென்னை : ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; 

தமிழகத்தில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை. ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது கற்பனை. இது குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும் போது ஆவின் பாலின் விலை குறைவு.  

சந்தையில் தனியார் நிறுவன நெய் ரூ. 1000 வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆவின் நெய் ரூ. 700-க்கு விற்கப்படுகிறது. ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் நாங்கள் செய்யவில்லை. புகார்களை ஆய்வுசெய்து சரிசெய்து வருகிறோம். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து