எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
தமிழகத்தில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதே போல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப் பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம், ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதே போல், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும். கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.
புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும்.
இதனைத் தவிர்க்க, காவல் துறையின் மாவட்ட அலுவலர்கள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும், ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வர வேண்டும்.
இதுதவிர, முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல பலனை அளிக்கும். நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும் அறிவியல்பூர்வமாக காவல் துறை செயல்பட வேண்டும். அடுத்து, பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
இத்தகைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.
போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும், அதே போல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள்பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த அவசரகால உதவி எண்கள், வாட்ஸ்-அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது என்று அறிகிறேன். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மலைப்பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதைபொருட்கள் கடத்தலைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் ஆளிநர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் அவர்களின் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று, எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறை சிறப்பாகச் செயல்பட, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தருவதிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.


