முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2,000 நோட்டுகளை மாற்றி கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவு பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெறப்படாது என அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
2000

Source: provided

சென்னை:ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. தொடர் விடுமுறை வருவதால் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் இன்று முதல் பெறப்படாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதிக்கு(நாளை) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது. 

இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். 

இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. 

இதே போல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை நிறுத்தி விட்டன. 

இந்தநிலையில் பெட்ரோல் பங்க்குகளில் நேற்று மட்டுமே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று வங்கி விடுமுறை, 29, 30-ம் தேதிகளில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்பதால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நாளையுன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து