முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 45 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

சனிக்கிழமை, 30 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி :  புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 45 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது. மேலும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வைகுண்டம் பியூ காம்ப்ளக்சில் இருந்து நேரடியாக இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 45 மணி நேரம் ஆகிறது. கூட்டம் நிரம்பி வழிவதால் சுமார் 7 கி.மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். 

இலவச தரிசனத்திற்கு டோக்கன் கிடைக்காத பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள மண்டபங்களில் அவரவர் குடும்பங்களோடு தங்கியுள்ளனர்.  வாகன நிறுத்துமிடமும் நிரம்பி வழியும் நிலையில் இன்னும் 2 நாள்களுக்குக் கூட்டம் குறையாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

திருப்பதியில் தங்கும் அறைகளும் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். திருமலையில் கூடியுள்ள பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைத் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து