முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத் கோவில் நடை அடைப்பு

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2023      ஆன்மிகம்
Kedarnath-Temple-2023-11-16

ராய்ப்பூர், உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை அடைக்கப்பட்டது. 

குளிர்காலத்தில் கேதார்நாத் கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டு விடும் என்பதால் ஆறு மாதங்களுக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். கேதார்நாத் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் கோவிலின் கதவுகள் புதன்கிழமை காலை சாத்தப்பட்டன.

இந்நிகழ்வின்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை வழிபட்டதாக பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். 

கோவிலின் நடை சாத்தப்பட்ட பிறகு கேதார்தாத் சிவனின் பஞ்சமுக விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. உகிமடம் பகுதியில் உள்ள ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் இந்த விக்கிரகம், குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும். கேதார்நாத் கோவிலில் நடப்பாண்டில் 19.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டதாக அஜேந்திர அஜய் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து