முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலியர்களுடன் இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கை வரிசை

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      உலகம்
Israel-freighter 2023-11-21

டெல் அவிவ், இஸ்ரேல் பணியாளர்களுடன் இந்தியா வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்துள்ளது. செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமாகி விட்டது.

அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும், ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. 

இந்த கப்பல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது ஆகும். கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து