முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு பார்க்கிங் விவகாரம்: கூட்டு சர்வே நடத்துவதற்கு தமிழ்நாடு-கேரளா சம்மதம்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Mullaperiyar-dam 2023 07-11

Source: provided

புதுடெல்லி : முல்லைப்பெரியாறு பார்க்கிங் விவகாரத்தில் கூட்டு சர்வே நடத்த சர்வே ஆஃப் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில், கூட்டு சர்வே நடத்துவதற்கு தமிழ்நாடு-கேரளா அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. 

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில அளவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை நவ.28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பார்க்கிங் விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவிட்டார். 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து