முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
JEE 2023 06 18

புது டெல்லி, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் உயர்கல்வித்துறை நிறுவனங்களான ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 

இதில், ஜே.இ.இ மெயின் தேர்வு ஆண்டு தோறும் 2 கட்டங்களாக நடத்தப்படும். அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வு வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடை பெறவுள்ளது. 

இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையில், ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில் இதனை ஏற்றுக் கொண்ட தேர்வு முகமை, ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை 4-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து