முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை : மாவட்டசெயலாளர் சுரேஸ் பங்கேற்பு.

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
Tuticorin 2023-12-02

Source: provided

கோவில்பட்டி : தமிழ் திரைப்படஉலகில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக திரைஉலகில் தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவிசெய்பவர் என்று சொன்னால் அது நடிகர் விஜயகாந்தையே சாரும். அவர் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும்சரி, ஏழ்மையில் உள்ளோருக்கும்சரி, அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் விஜயகாந்த் ரசிகர்கள் கோயில் கோயிலாக சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். 

தமிழகத்தில் முன்னோடியாக தூத்துக்குடி வடக்குமாவட்ட தேமுதிக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருக்கோயில்களான கோவில்பட்டி அருள்மிகு செண்பகவள்ளிஅம்மன் உடனுறை பூவனாதசாமி திருக்கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கயத்தார் அகிலாண்டஈஸ்வரி திருக்கோயில், காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருக்கோயில், தூத்துக்குடி பனிமயமாதா திருக்கோயில், ஆகியவற்றில் தூத்துக்குடி வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஸ் தலைமையில் தினமும் ஐந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

கயத்தார் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் ஆலயத்தில் மாவட்டசெயலாளர் சுரேஸ் தலைமையில் சிறப்புபூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது. மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், கயத்தார்  ஒன்றியசெயலாளர் அருண், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், கோவில்பட்டி ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கயத்தார் நகரசெயலாளர் கண்ணண், மாவட்ட மகளீரணிசெயலாளர் வெண்ணிலா, முன்னாள் மாவட்டநிர்வாகி முத்துமாலை, அருணாச்சலம், விஜய், மதிமுத்து, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 17 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 18 hours ago
View all comments

வாசகர் கருத்து