முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் 3 நாட்கள் இந்தியாவில் கென்யா அதிபர் ரூடோ சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      உலகம்
Kenya 2023-12-03

Source: provided

நைரோபி : கென்ய அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ இன்று முதல் 6-ம் தேதி வரை இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

தென் ஆப்பிரிக்காவின் இந்திய பெருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள நாடு, கென்யா. இதன் தலைநகரம் நைரோபி. ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், கென்யா அதிபர் வில்லியம் சாமோய் ரூடோ இந்தியாவிற்கு இன்று 4-ம் தேதியில் இருந்து 6-ம் தேதி வரை 3-நாள் அரசியல் சுற்று பயணமாக வருகை தர உள்ளார். அதிபருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் உடன் வருகை தர உள்ளது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அதிபர் வில்லியம் மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 5-ம் தேதியன்று அதிபர் வில்லியமிற்கு ராஷ்டிரபதி பவனில் அரசுமுறை உபசரிப்பும், விருந்தும் வழங்கப்பட உள்ளது. 

தனது பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியுடன், வில்லியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்திய தொழில்துறையில் முதலீடு செய்வது குறித்து டெல்லியில் நடைபெற உள்ள கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வில்லியம், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

வில்லியம், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வருகை தரும் கென்ய அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக தனது வருகை குறித்து கென்ய அதிபர் வில்லியம்,  இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் இடையே சிறப்பான இருதரப்பு உறவு நிலவி வருகிறது. ஜி20 கூட்டமைப்பில் 55 உறுப்பினர் நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து