முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூ-ஆர் கோடு மூலம் பணப்பரிமாற்ற முறை கம்போடியா - வியட்நாம் இடையே அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      உலகம்
QR-line 2023-12-05

Source: provided

புனோம்பென் : கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

இதன் அறிமுக விழா கம்போடியாவின் சீம் ரீப் மாகாணத்தில் நடைபெற்றது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வியட்நாம் ஸ்டேட் வங்கி கவர்னர் நிகுயென் தி ஹாங் மற்றும் கம்போடிய தேசிய வங்கியின் கவர்னர் சியா செரே ஆகியோர் தலைமையில், பேமென்ட்  லிங்க் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.  

இந்த புதிய கட்டண முறையானது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனவும், எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் கரன்சியின் பயன்பாட்டையும் ஊக்குவிக்கிறது. 

இந்த எல்லை தாண்டிய கியூஆர் கோடு கட்டண முறையானது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் வியட்நாமில் கம்போடிய கரன்சியில் பொருட்களை வாங்குவதற்கும் பணம் செலுத்துவதற்கும் உதவுகிறது. 

இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வியட்நாம் தவிர தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுடனும் இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் தொடர்பான கியூஆர் கோடு லிங்கை கம்போடியா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து