முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசை குறை சொல்ல முடியாது: காரின் மீது அமர்ந்து உதவி கேட்கும் நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      சினிமா      தமிழகம்
Mansoor-Alikhan-2023-12-07

சென்னை, நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை  பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 

இது அரும்பாக்கம், திருக்கமலம் கோயில் மூன்றாவது தெரு. 100 மீட்டர் தொலைவில் கூவம் ஆறு உள்ளது. செம்பரம்பாக்கம் தண்ணீர் நம்ம ஏரியாவிற்கு வருவது அரிது. அணை தண்ணீர் திறந்து விட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும். கூவம் ஆறை ஒட்டியுள்ள பகுதி இது என்பாதல் தண்ணீர் வரும். பலரும் தாழ்வாக கட்டி விட்டார்கள்.

 நான் கொஞ்சம் உயராமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.  எல்லாவற்றிற்கும் பெருநகர மாநகராட்சியை, அரசை குறை சொல்ல முடியாது. ஏனெனில், செம்பரம்பாக்கம் அணையில் நீர் அதிகமாக இருந்தால் அதை திறந்து விட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அணை உடைந்து விடும். 

ஏரி கரையில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்து விட்டது. ஏனெனில், பெரும் மழை, புயல். எதுவும் செய்ய முடியாது. அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நிஜத்தை பேசனும். கூவம் ஆற்றிற்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள எல்லாரும் பாதிக்கப்படுவார்கள்.  

எல்லாம் ஆக்கிரமிப்பு  பகுதிகளில் கட்டப்பட்டது. ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த வேதனைகளை எல்லாம் தாங்க வேண்டியதாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் அதிக கொள்ளவு கொண்ட ஏரி. அது நீர் நிரம்பி உடைந்து விட்டால் சென்னையே மூழ்கி விடும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து