முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் நிதி நிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      தமிழகம்
EPS 2023-10-11

Source: provided

சென்னை : வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலன் இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று  தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.  தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. 

நெல், கரும்பு  குறித்த தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் நெல் கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும். 

அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது. குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து