முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்தியா..?ராஞ்சியில் இன்று 4-வது போட்டி தொடக்கம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      விளையாட்டு
22-Ram-54

Source: provided

ராஞ்சி:இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்தியா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று 4-வது போட்டி ராஞ்சியில் தொடங்குகிறது.

இந்தியா முன்னிலை...

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி...

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரேகன் அகமதுக்கு பதில் பஷிர் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ராபின்சன் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன்:- பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி

பும்ராவுக்கு ஓய்வு...

ராஞ்சியில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது என்றால் அவருக்குப் பதில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் வருவார் என்று நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ராஞ்சி பிட்சைப் பற்றி வரும் தகவல்கள் அது ஒரு குழிப்பிட்ச் என்றே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து