முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை பெற்ற டிரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      உலகம்
Trump 2023 03 05

Source: provided

வாஷிங்டன் : குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை வகித்துள்ளார். 

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். 

அக்கட்சியின் வேட்பாளர் தேர்வில், டிரம்புக்கு அதிக ஆதரவு உள்ளது. எனவே, அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பதவிக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில் தெற்கு கரோலினா மாகாணத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியான முன்னாள் மாகாண கவர்னர் நிக்கி ஹாலே மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருவது  குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து