முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் நாட்டிலேயே மிக நீளமான 4 வழி கொண்ட சுதர்சன் சேது கேபிள் பாலம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

போர்பந்தர் : குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று காலை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். 

இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற இந்த பாலம் குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரையிலான பகுதிகளை இணைக்கின்றது. இதுபற்றிய தேவபூமி துவாரக நிர்வாகத்தின் அறிக்கையின்படி, 

இந்த பாலம் 2.32 கி.மீ. தொலைவை உள்ளடக்கியது.  இவற்றில் 900 மீட்டர் தொலைவுக்கு கேபிளால் இருபுறமும் இணைக்கப்பட்ட பகுதி, பாலத்தின் மத்தியில் அமைய பெற்றுள்ளது. ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலம் 27.20 மீட்டர் அகலம் கொண்டது.  சிக்னேச்சர் பாலம் என்ற பெயர் கொண்ட இந்த பாலம், சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

.இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-

சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார். அவரால் இது சாத்தியமானது. குஜராத்தின் முதல்வராக  இருந்தபோது, நான் சுதர்சன் சேது திட்டத்தை மத்திய காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இன்று துவாரகாவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்தேன். என் கனவு நனவாகியதால், என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது.

 காங்கிரஸ் கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதும், மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது. 2014-ல் நீங்கள் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பிய போது கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவேன் என்று உறுதியளித்தேன். 

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டு, தற்போது இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்.காஷ்மீரில் உள்ள செனூப் பாலம், மும்பையில் உள்ள அடல் சேது, தமிழகத்தில் உள்ள செங்குத்து தூக்கு ரெயில்வே கடல் பாலம் ஆகியவற்றைப் போலவே சுதர்சன் பாலமும் பொறியியல் அதிசயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.  

இந்த பாலத்தை திறந்தது வைத்தது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நிலங்களையும் மக்களையும் இணைக்கும் பாலமான சுதர்சன் சேதுவை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பாலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பின் சான்றாகத் துடிப்புடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து