முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? - த.மா.கா. இளைஞரணி தலைவர் விளக்கம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று முன்தினம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. த.மா.கா. தலைவர் ஜி.கே வாசனை பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசினார். இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து செயல்பட உள்ளது. பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பா.ஜ.க.வில் அங்கம் வகிக்க த.மா.கா. முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.

த.மா.கா. - பா.ஜ.க. கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணியின் தலைவராக உள்ள யுவராஜா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019 -ம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து